உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநியில் லங்கா கட்டை உருட்டி ஏமாற்றும் கும்பல்; 5 பேர் கைது

 பழநியில் லங்கா கட்டை உருட்டி ஏமாற்றும் கும்பல்; 5 பேர் கைது

பழநி: பழநி கிழக்கு கிரிவீதி சுற்றுலா பஸ் ஸ்டாண்டில் லங்கா கட்டை உருட்டி பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பலை சேர்ந்த ஐவரை போலீசார் கைது செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு கார்த்திகை முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிக்க ஆந்திரா, கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இவர்களை ஏமாற்றும் விதமாக கிழக்கு கிரிவீதி இலவச சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 'லங்கா கட்டை' உருட்டி பக்தர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்து ஏமாற்றும் கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர். கோவை மாவட்டம் சூளூரை சேர்ந்த ரத்தினம் 59, ரமேஷ் குமார் 32 செல்வபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் 48, திருப்பூர் மாவட்டம் அய்யன் நகரை சேர்ந்த மூக்கையா 67, கழிக்க நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருப்பு சாமி 47, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம், கார், டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி