மேலும் செய்திகள்
திருநெல்வேலி ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
01-Sep-2025
திண்டுக்கல்: கன்னியாகுமரி சென்ற ஹவுரா ரயிலில் கடத்திய கஞ்சா, குட்காவை திண்டுக்கல் ரயில்வே போலீசார் பறிமுதல்செய்னர். கன்னியாகுமரி சென்ற ஹவுரா அதிவிரைவு ரயிலில் கஞ்சா, தடை குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் வந்தது.எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் வந்த ஹவுரா ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரயில் இன்ஜின் அருகே உள்ள பொதுப்பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பேக்கை சோதனை செய்தனர். அதிலிருந்த 5.200 கிலோ கஞ்சா ,8 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர்.
01-Sep-2025