சிலம்ப கழக பொது கூட்டம்
சின்னாளபட்டி : தமிழ்நாடு சிலம்ப கழக மாநில பொதுக்குழு கூட்டம் சின்னாளபட்டியில் நடந்தது. மாநில தலைவர் குரு ஏழுமலை தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அகத்தியர் ஞானபண்டிதன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சிலம்ப கழகம், மாநில அரசின் அங்கீகாரத்தை பெறுவதற்கான பணிகள் குறித்து பொறுப்பாளர்கள் இடையே கலந்துரையாடல் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட தலைவராக பிரேம்நாத், செயலாளராக வெங்கடேசன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.