உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தெரு நாய்கள் கடித்ததில் ஆடு, கோழிகள் பலி

தெரு நாய்கள் கடித்ததில் ஆடு, கோழிகள் பலி

வடமதுரை: அய்யலுார் வேங்கனுாரை சேர்ந்த விவசாயி சக்திவேல் 49. ஆடுகள், கோழிகளை வளர்க்கிறார். நேற்று காலை அவரது தோட்டத்திற்குள் கூட்டமாக புகுந்த தெருநாய்கள் கடித்ததில் ஒரு ஆட்டுக்குட்டி, 10 கோழிகள், 20 கோழிக்குஞ்சுகள் இறந்தன. பெரிய ஆட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அய்யலுார் சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில்,'' நாய்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருக்கும் நிலையில் கட்டுக்குள் வைக்க 10 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. பெரிய ஊர்களில் மக்களுக்கு தொந்தரவாக இருக்கும் நாய்களை பிடித்து கிராமப்பகுதிகளில் விட்டு செல்வதும் நடக்கிறது. புதிய இடத்தில் தனக்குரிய உணவு கிடைக்காமல் தவிக்கும் நாய்கள் வேட்டையாடும் குணத்தை வெளிப்படுத்துகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை