உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுரோட்டில் நின்ற அரசு பஸ்

நடுரோட்டில் நின்ற அரசு பஸ்

நத்தம்: நத்தம்- கோவில்பட்டியை சேர்ந்தவர் செந்தில் 35. நத்தம்- போக்குவரத்து பணிமனையில் தற்காலிக டிரைவராக பணி புரிந்து வருகிறார் . நேற்று மாலை 4:50 மணிக்கு நத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பட்டணம்பட்டிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார்.மதுரை சாலையில் திரும்ப முயன்ற போது சாலையோர தடுப்பில் பஸ்சின் பின் பக்க தகடு உரசியது. இதை கவனிக்காமல் மீண்டும் பஸ்சை இயக்க பின்பக்கம் பிரேக் அருகில் இருந்த ராடுகள் கழன்று விழுந்தது. இதனால் பஸ் நடுரோட்டில் நின்றது. போக்குவரத்து துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 7:50க்கு பஸ்சை அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ