உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: மருத்துவக் கல்லுாரிகளில் டாக்டர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும், டாக்டர்கள், பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே புதிதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சீனிவாசன் தலைமை வகித்தார். டாக்டர்கள் நாகராஜ், திருலோக சந்திரன், கார்த்திகேயன், லலித்குமார், சிவக்குமார், ரேகா கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ