உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத்தலைவர், மாநில செயலாளர், மகளிர் துணை குழு அமைப்பாளர், மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் ஆகியோரை தாக்கிய விருதுநகர் டி.எஸ்.பி.,, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டக்கிளைத் தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க வட்ட கிளை தலைவர் சரவணன், தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தின் வட்டக் கிளைச் செயலாளர் பரமேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க கோட்டத் தலைவர் செல்வம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக் கிளை தலைவர் சிவனேஷ், மாவட்ட இணை செயலாளர் மகாராஜா பேசினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் வட்டார தலைவர் வேளாங்கண்ணி நன்றி கூறினார்.திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் முன்பு ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக்அலி, மாவட்டச்செயலாளர் சுகந்தி பேசினர். துரை ராஜ் நன்றி கூறினர்.இதே போல் பழநி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆத்துார்,ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை உள்ளிட்ட 11 மையங்களில்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை