உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

வேடசந்துார்: வேடசந்துார் ராஜகோபாலபுரம் அரசு துவக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, ஜெயராணி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார வள மைய அலுவலர் செல்வராணி பரிசு வழங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சி தலைவர் மேகலா, ஆசிரியர்கள் நடராஜன், வெங்கடாஜலபதி, சுமித்ரா, சரஸ்வதி, ரோஸ்லின் ஸ்டெல்லா மேரி, அருள், கார்த்திகா, விஜயலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ