அரசு பள்ளி மாணவி தேர்வு
நத்தம்: திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் சமுத்திராபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள், ஊர் மக்கள் பாராட்டினர் .