பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் நடத்துவதற்கான உடனடி அறிவிப்பு, அட்டவணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சின்னமுனியப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அழகுமலை வரவேற்றார். செயலாளர் சரவணக்குமார், மாநில துணைத்தலைவர் சாலமன் தாவிது முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ பேசினார்.