மேலும் செய்திகள்
முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
12-Nov-2024
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்து கொண்டார். என்.பி.ஆர்., தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர் பி.மருதுகண்ணன் வரவேற்றார். கலை அறிவியல் கல்லுாரி 2ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி செல்வி குணவதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி கல்வி இயக்குனர் கார்த்திகை பாண்டியன்,கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன்,பல்தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆனந்த். கல்விக்குழும தொடர்பு அலுவலர் தேவி கலந்து கொண்டனர்.திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் 38 பள்ளிகளைச் சேர்ந்த 3000க்கு மேற்பட்ட மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். என்.பி.ஆர்., நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.
12-Nov-2024