மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
வேடசந்தூர்: ''வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்'' என வேடசந்துார் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் சுகுமார் வலியுறுத்தி உள்ளார். வழக்கறிஞர்கள் தாக்கப்படும் போது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் உருவாக்க கோரியும் வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாளையம் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கந்தசாமி, துணை செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் பகவத்சிங், உறுப்பினர்கள் கணேஷ் சுந்தரம், செல்வராஜ், மகாலட்சுமி, கனி, பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் சுகுமார் பேசுகையில், ''டில்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இல்லையேல் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு அனைவருக்கும் துப்பாக்கி வழங்க வேண்டும் என்றார்.
08-Oct-2025