உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கில் மூவர் மீது குண்டாஸ்

பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கில் மூவர் மீது குண்டாஸ்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே பா.ஜ., முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் 39, வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜக்காபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். ஜூலை 3ல் மடூர் மணியக்காரன்பட்டி பிரிவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது டூவீலர்களில் வந்த 6 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலைக்கு மூளையாக செயல்பட்ட மோகன்ராஜ் 23, கஜேந்திரன் 26, கணேஷ் குமார் 29, உள்ளிட்ட மூன்று பேர் மீது எஸ்.பி., பிரதீப் பரிந்துரையின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை