உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதி வழியில் பழுதான அரசு பஸ்

பாதி வழியில் பழுதான அரசு பஸ்

தாண்டிக்குடி,: தாண்டிக்குடி மலைப்பகுதியில் பாதி வழியில் பழுதான அரசு பஸ்சால் பயணிகள் பரிதவித்தனர். வத்தலக்குண்டு அரசு கிளை மூலம் ஏராளமான பஸ்கள் மலைப்பகுதிக்கு இயக்கப்படுகிறது. இவை பாதி வழியில் பழுதாகும் அவலம் நீடித்து வருகிறது. நேற்று காலை வத்தலக்குண்டில் இருந்து ஆட லுாருக்கு அரசு பஸ் புறப்பட்டது. தொடர்ந்து சித்தரேவு தாண்டிக்குடி மலை ரோட்டில் பழுதாகி நின்றது. 40க்கு மேற்பட்ட பயணிகள் பரிதவித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அரசு பஸ்சால் மலைப்பகுதிக்கு செல்லும் பிற வாகனங்கள் தவித்தன. மலைப்பகுதிக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் இஞ்ஜின், ரேடியேட்டர் காலாவதி,மாற்று டயர் இல்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளால் பாதி வழியில் நிற்கும் போக்கு உள்ளது. மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களை சீரமைத்து நல்ல நிலையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை