சுகாதார அலுவலர் ரயில் மோதி பலி
குஜிலியம்பாறை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசகன் 56. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். குடும்பத்தார் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் நிலையில் சீனிவாசன் குஜிலியம்பாறையில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 6:30 மணிக்கு குஜிலியம்பாறை சி.அம்மாபட்டி அருகே கரூர் திண்டுக்கல் ரயில்வே பாதையை கடக்க முயன்ற போது, மைசூர் துாத்துக்குடி ரயில் மோதி பலியானார்.திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.