உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாட்டர் பெல் திட்டத்திற்கு உதவி

வாட்டர் பெல் திட்டத்திற்கு உதவி

சித்தையன்கோட்டை : அரசின் 'வாட்டர்பெல்' திட்டத்திற்கு உதவும் வகையில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஆத்துார் தன்னார்வலர் சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்கினார்.காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜாராம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சவுதாமணி முன்னிலை வகித்தார். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.அரசின் 'வாட்டர்பெல்' திட்டத்திற்கு உதவும் வகையில் ஆத்துாரை சேர்ந்த பசுமைக்குறள் அமைப்பின் தன்னார்வலர் முத்துக்குமார் ரூ. 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் வாட்டர் பாட்டில்களை வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, புரவலர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி