மேலும் செய்திகள்
உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னேற்பாடு கூட்டம்
07-May-2025
திண்டுக்கல்,: திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலைநாடார் பள்ளியில் நடந்த மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்யும் வகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமை வகித்த கலெக்டர் சரவணன் பேசியதாவது:உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களின் தொடர்பு எண், முகவரியை தெரிந்து வைத்திருத்திருப்பதோடு, மாணவர்களின் ஆதார் எண் போன்ற முழு விவரங்களை ஆண்டு வாரியாக குறிப்பிட்டு தனி பதிவேடாக பராமரித்தல் வேண்டும்.12-ம் வகுப்பு முடித்துள்ள அனைவரையும் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்க்கை செய்வதே கல்லுாரிக் கனவு நிகழ்ச்சியின் நோக்கமாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்வதில் சந்தேகங்கள்,இடர்பாடுகள் இருப்பின் மாவட்ட கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு உதவிகள் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
07-May-2025