மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சேவை நிதி வழங்க கலெக்டரிடம் மனு
4 hour(s) ago
ஆட்டோ ஓட்டுநர் சங்கம் நிதியுதவி கோரி மனு
4 hour(s) ago
திண்டுக்கல்:' ஆந்திர அரசை போன்று தமிழகத்தில் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாவட்ட பொதுச்செயலர் கணேசன், செயலாளர் செந்தில்வேல் வலியுறுத்தினர். அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் லட்சக்கணக்கான ஆட்டோ ,சரக்கு வாகன ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களுக்கு 15 ஆண்டு காலமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, உபர், ராபிட்டோ போன்றவைகளால் ஆட்டோ ஓட்டுநர்களின் தொழில் நலிவடைந்து குடும்பங்கள் வறுமையில் உளளன. ஆந்திரா அரசு ஆண்டுக்கு ஒரு முறை 'ஆட்டோ ஓட்டுநர் சேவை' என்று திட்டத்தின் மூலமாக ரூ.15, 000 வழங்குகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கிட வேண்டி அந்தந்த மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசிடம் கொண்டு சேர்க்க கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago