மேலும் செய்திகள்
ஆயுத பூஜை
03-Oct-2025
அம்பிளிக்கை: திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை அருகே வீடுபுகுந்து வாலிபர் ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். கொசவபட்டியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் 23. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் 25, என்பவருக்கும் முன்பகை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு செந்தமிழ் செல்வன் மற்றும் மூன்று பேர் ஸ்டாலின் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கினர். இதில் ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை தடுக்கச் சென்ற ஸ்டாலின் தந்தை பெரியசாமியையும் தாக்கினர். காயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் அம்பிளிக்கை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
03-Oct-2025