உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இதயமே உன்னை காதலிக்கிறேன்... 

இதயமே உன்னை காதலிக்கிறேன்... 

உலக இதய தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் இதயத்தின் மீது அக்கறை கொண்ட அன்பனாய் உங்களிடம் உரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தொன்னுாறு காலகட்டத்தில் உலகெங்கும் மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட வியாதிகளினால் மனிதகுலத்தின் இறப்பு விகிதமானது உலக அளவில் அச்சுறுத்தல் ஏற்படும் அளவிற்கு பன்மடங்காக பெருகி வருகிறது. ஒருபக்கம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மறுபக்கம் துரித உணவு பழக்கவழக்கங்கள், புகை ,மதுப் பழக்கம் அதிகரிக்க தொடங்கியதே இறப்பு விகிதம் அதிகரிக்க காரணமாக உள்ளது.நமக்கு இருப்பதோ ஒரு இதயம் ஒரு வாழ்க்கை. இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகளை கடைபிடித்தல் மிகவும் அவசியமாகும். உடல் நிறை குறியீட்டை (பி.எம்.ஐ.,) கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் (ஹைப்பர்லிபிடேமியா) ஆகியவற்றை கண்காணித்தல்,அதிகப்படியான சோடியம் உட்கொள்வதை தவிர்த்தல், ஆரோக்கியமான, சீரான உணவுகளை உண்ணவேண்டும். புகைபிடித்தல் ,மது அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் சாதாரணமான துாக்கத்தை பெறவும் கற்றுக் கொள்ள வேண்டும். வியர்வை சிந்த தினந்தோறும் 1 மணி நேரம் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.மிக முக்கியமான ஒன்று குடும்ப உறவுகள்,நண்பர்களுடன் சேர்ந்து ஆரோக்கியமான நேரத்தை செலவிட வேண்டும்.- டாக்டர் எஸ்.சபரிராஜன், இதய நல மருத்துவர், 98421 88880.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி