உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

சின்னாளபட்டி; சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பெறுவதற்கு இணையாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என அமைச்சர் பெரியசாமி பேசினார். பித்தளைப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நல உதவிகளை வழங்கிய அமைச்சர் பேசியதாவது : தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை , முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பி.டி.ஓ.,க்கள் முருகன், பத்மாவதி, தனி தாசில்தார் தனுஷ்கோடி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !