உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பரிதவிப்பில் கொடை பயணிகள்; கொடை ரோடு ஸ்டேஷ னில் நிற்கா ரயில்கள் ; கொரோனாவுக்கு பின் நிறுத்தப் படாததால் பரிதவிப்பு

பரிதவிப்பில் கொடை பயணிகள்; கொடை ரோடு ஸ்டேஷ னில் நிற்கா ரயில்கள் ; கொரோனாவுக்கு பின் நிறுத்தப் படாததால் பரிதவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு வரை, சென்னை, மதுரை நோக்கி சென்ற பெரும்பாலான ரயில்கள் நின்று சென்றன. தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்து கொடைக்கானல், மூணாறு பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சபரிமலை சீசனில் இந்த ஸ்டேஷனை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் கொடைரோடு ஸ்டேஷன் வரும் பயணிகள் வாடகை கார்கள் மூலம் கொடைக்கானல், மூணாறு , சபரிமலைக்கு சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விளைவிக்கப்படும் பழங்கள், பூக்கள், இதர விவசாய விளை பொருட்களை சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு அனுப்ப கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் பெரிதும் உதவியாக இருக்கிறது.கொரோனா காலத்திற்கு முன் முக்கிய ரயில்கள் அனைத்தும் கொடைரோடு ஸ்டேஷனில் நின்று சென்றன. ஆனால் தற்போது வைகை, முத்து நகர், அனந்தபுரி, திருச்செந்துார் உள்ளிட்ட அதிவேக ரயில்கள் நிற்பது இல்லை. இதனால் பயணிகள் திண்டுக்கல் ,மதுரை ரயில்வே ஸ்டேஷன்களில் இறங்கி நீண்ட துாரம் பயணிக்க வேண்டியது உள்ளது. இதை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே நின்று சென்ற ரயில்கள் மீண்டும் நின்று செல்ல தொடங்கினால் ரயில் பயணிகளும், பயணிகளை நம்பி கொடைரோடு பகுதியில் தொழில் செய்வோரும் பயன் பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
நவ 20, 2024 21:18

இனிமே எல்லாம் வந்தே பாரத் தான். மதுரைக்கோ, திருச்சிக்கோ பஸ்ஸில் போய் அங்கே ரயில்ல ஏறிக்கோங்க.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 20, 2024 10:21

கொரோனாவை காரணம் காட்டி நாட்டில் நடந்த ஏகப்பட்ட அநியாயங்களில் இதுவும் ஓன்று. ஓடிக்கொண்டிருந்த நிறைய ரயில்களை கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி விட்டு மீண்டும் இயக்கவில்லை. அப்படி நிறுத்தி இயக்கிய சில ரயில்களிலும் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள். செங்கோட்டை மதுரை பயணியர் ரயில்கள் இதற்க்கு மிகசிறந்த உதாரணம். இங்கே கேள்வி கேட்க ஆளில்லை. மத்திய அரசுக்கும் மக்களின் வலி புரியவில்லை.இதற்கு காரணம், ரயில்வே அதிகாரிகள் பேருந்து உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ரயில்களை இயங்குவதில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மோடிஜி இதன் மீது தீவிர விசாரணை நடத்தினால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் வெளிப்படும். ஆனால் அதை மத்திய அரசு செய்வதில்லை. மக்களிடம் கொள்ளை அடித்து ஆட்சி நடத்துகிறார்கள். ஆனால், மக்கள் நல அரசு என்று பீத்திக் கொள்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை