உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் இடைவிடாத சாரல்; சூறைக்காற்று; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் இடைவிடாத சாரல்; சூறைக்காற்று; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்; கொடைக்கானலில் இடைவிடாது பெய்த சாரல் மழை, சூறைக்காற்றால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.சில தினங்களாக மிதமான மழை பெய்த நிலையில் சூறைக்காற்று வீசியது. நேற்று முன்தினம் மழை சற்று ஓய்வு எடுத்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால் நேற்று காலை முதல் நகரை பனிமூட்டம் சூழ்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பின் மிதமான மழை பெய்தது. சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகையின்றி வெறுமனே இருந்தது. பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. சாரல் மழையால் பயணிகள் விடுதிகளில் முடங்கினர்.மதியத்திற்கு பின் சூறைக்காற்று கடுமையாக வீசியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ