உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு ...: போதை நபர்களால் மக்கள் அச்சம் 

சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு ...: போதை நபர்களால் மக்கள் அச்சம் 

மாவட்டத்தில் 152 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதுதவிர எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களும், எலைட் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில் தினமும் குடிமகன்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.மதுபோதை தலைக்கேறிய நிலையில் சிலர் ரோட்டில் விழுந்துகிடப்பதும், தகராறு செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதம் குடிமகன்கள் செய்யும் அட்டகாசங்களும் சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கிறது. கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மது, கஞ்சா போதையின் விளைவாகவே நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2025 05:47

கலைஞர் விடுதிகளும் , ஸ்டாலின் விடுதிகளும் அதிகரித்து விட்டன , அவற்றால் மக்களுக்கு எந்த தொல்லையும் ல்லை என்பதுதான் உடன்பிறப்புகளின் வாதமாக இருக்கும்