மேலும் செய்திகள்
தொடரும் மேகமூட்டத்தால் ஏமாற்றத்தில் விவசாயிகள்
26-Sep-2025
ஆத்துார்: நீர்பிடிப்பு பகுதியில் மழையால் கூழையாற்றில் இருந்து ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கான வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளான மணலுார், மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தாண்டிக்குடி, புல்லாவெளி, ஆடலுார் பகுதிகளை நீர்பிடிப்பாக கொண்டு ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், 30க்கு மேற்பட்ட கிராம கூட்டு குடிநீர் திட்டங்கள் இப்பகுதியில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. 2023ல் 5 முறையும், 2024ல் 4 முறையும் நிரம்பிய நீர்த்தேக்கம் இந்தாண்டு போதிய மழையின்றி வாய்க்காலின் வரத்து நீர் இல்லை . 6 மாதங்களாக குறைய துவங்கிய நீர்மட்டம் சில நாட்களுக்கு முன் 2.5 அடி( 24 அடி)யாக இருந்தது. தற்போது இரு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்றைய நிலவரப்படி 4.2 அடியாக உயர்ந்துள்ளது.-
26-Sep-2025