உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர்வரத்து அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரிப்பு

பழநி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் பழநி பாலாறு- பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (அக்.,24) காலை 6:00 மணிக்கு அணை நிலவரம்: பாலாறு பொருந்தலாறு அணை நீர்மட்டம் 37.34 அடியாக (மொத்தம் 65 அடி) உயர்ந்துள்ளது. நீர்வரத்து 649 கனஅடி, நீர் வெளியேற்றம் வினாடிக்கு 11 கனஅடியாக உள்ளது. வரதமாநதி அணை நீர்மட்டம் 47.77 அடி(66.47 அடி), நீர்வரத்து 158 கனஅடி, நீர் வெளியேற்றம் 3 கனஅடி, குதிரையாறு அணை நீர்மட்டம் 42.90 அடி (80 அடி), நீர்வரத்து 60 கனஅடி, நீர் வெளியேற்றம் 5 கன அடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !