கொடைக்கானல் ஏரியில் நடைமேடை பணி துவக்கம்
கொடைக்கானல்: தினமலர் செய்தி எதிரொலியாக பாதியில் நின்ற ஏரிச்சாலை நடைமேடை பணிகள் மீண்டும் துவங்கியது.சுற்றுலா தலமான கொடைக்கானலின் இருதயமாக உள்ள ஏரிச்சாலையில் ரூ. 24 கோடியிலான வளர்ச்சி பணிகள் ஆண்டு கணக்கில் மந்தகதியில் தரமற்று நடந்து வருவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயகண்ணன், நகராட்சி பொறியாளர் செல்லத்துரை நகராட்சி நடைமேடை பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணிகளை தாமதமின்றி முடிக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்த நேற்று பணிகள் துவங்கின. நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,''பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.