| ADDED : பிப் 12, 2024 05:35 AM
தொப்பம்பட்டி: பழநி தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.17 கோடியே 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். மொல்லம்பட்டி ஊராட்சியில் தடுப்பணை, சிறு பாலம், தரைமட்ட நீர் தேக்க தொட்டி திறப்பு விழா, வானூர் ஊராட்சியில் பள்ளி சுற்றுச்சுவர், சாலை, தாழையூத்து ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பணிகள்,கோயிலம்மாபட்டி, நாச்சியப்ப கவுண்டன் வலசு, கல்த்துறை புதூர், ஆலாவலசு, கந்தப்ப கவுண்டர் வலசில் நலத்திட்ட பணிகள் துவங்கி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது,பொருளாதார மேம்பாடு அடையும் சூழலில் தனிமனித வருவாய் உயரும். எதிர்கால மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்றது போல் குடிநீர் திட்டங்கள், கிராம மேம்பாட்டு திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் சுகாதாரம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, பழநி ஆர்.டி.ஓ சரவணன் பங்கேற்றனர்.