உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைப்பு

பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைப்பு

திண்டுக்கல் : ஆண்டுதோறும் நடக்கும் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பயிர் விளைச்சல் போட்டி நடத்தி மாநில அளவில் முதல் 3 இடம் பெறும் விவசாயிகளுக்கு அனைத்து மாவட்டத்தில் இருந்து பெறப்படும் பயிர் வாரியான மகசூல் விபர அடிப்படையில் பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.2,5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3ம் பரிசாக ரூ.1 லட்சம் அளிக்கப்படுகிறது. அதே போல் நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்திற்கான மாநில பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற கம்பு,கடலை,பாசிப்பயறு, உளுந்து,கரும்பு ஆகிய பயிர்களுக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மேற்கண்ட வேளாண் பயிர் செய்யும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டி நுழைவுக் கட்டணம் ரூ.150 செலுத்தி போட்டியில் பங்கு பெறலாம். போட்டி விண்ணப்பம் பெற அடங்கல் விபரம் சமர்ப்பித்து விரிவான விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ