உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: வக்ப் மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் பதாதைகளுடன் திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தினர்.திண்டுக்கல் காந்திஜி புது ரோட்டில் உள்ள மக்கா மசூதியில் சிறப்பு தொழுகையின் போது கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.தொழுகை முடிந்து பள்ளிவாசல் முன்பு கையில் பதாதைகளுடன் மத்திய அரசின் வக்ப் மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேடசந்துார்: -- பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள பள்ளிவாசல் முன்பு ஜமாத்தார்கள் சார்பில ஆர்ப்பாட்டம் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க., அ.தி.மு.க., காங்., வி. சி. க., த.வெ.க., கம்யூ., கட்சியனரும் பங்கேற்றனர். தமிழக சட்டசபையில் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ