மேலும் செய்திகள்
மல்லிகை கிலோ ரூ 5000க்கு விற்பனை
30-Nov-2025
திண்டுக்கல்: தொடர் பனிப்பொழிவினால் பூக்களின் வரத்து குறைந்து விசேஷ நாட்கள் இல்லாத போதிலும் பூக்களின் விலை உயர்ந்து மல்லிப்பூ கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல் கின்றனர். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் செடியிலே பூக்கள் கருகி விடுவதால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 50 டன் பூக்கள் விற்பனைக்கு வரக்கூடிய இடத்தில் 20 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ரூ.1000 க்கு விற்பனையான மல்லிகை ரூ.3000 க்கு விற்பனையாகிறது. பச்சை முல்லை ரூ. 1000, வெள்ளை முல்லை ரூ.800, ஜாதி ரூ. 900, காக்கரட்டான் ரூ. 800,ரோஸ் ரூ.150, சம்பங்கி ரூ.800, செண்டு மல்லி ரூ.40 அரளி ரூ.250, செவ்வந்தி ரூ.100 என விற்பனையாகிறது.
30-Nov-2025