உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிலோ ரூ.1800க்கு விற்பனையான மல்லிகை

கிலோ ரூ.1800க்கு விற்பனையான மல்லிகை

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் வரத்து குறைவினால் மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1800க்கு விற்பனையானது.நிலக்கோட்டை சுற்றுப் பகுதிகளில் பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை பூக்களின் வரத்து குறைந்ததால் மல்லிகை பூக்கள் கிலோ ரூ. 1800க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூக்கள் வரத்துக்குறைவால் முல்லை, பிச்சி பூக்கள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. பிச்சி ரூ. 550, முல்லை ரூ. 750, கனகாம்பரம் ரூ. 1200, செண்டு மல்லி ரூ. 70, சம்பங்கி ரூ. 80, ரோஜா ரூ.100 என பூக்கள் விற்பனையானது.பூக்களுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை