உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கள்ளிமந்தையம் வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணிகள் தொடங்கியது அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

கள்ளிமந்தையம் வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணிகள் தொடங்கியது அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

கள்ளிமந்தையம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான கள்ளிமந்தையம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட உள்ளது. இத்திருப்பணிகள் தொடக்க விழாவில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்இக்கோயிலில் ஜன.29ல் பாலாலயம் நடத்தப்பட்டது. மூலவர் கருவறை, மூலவர் விமானம், மூன்று நிலை விமானம், மகா மண்டபம், கொடிமரம், பலிபீடம், தீபகம்பம், மூன்று நிலை ராஜகோபுரம் ரூ. 12 கோடியில் கட்டப்பட உள்ளன. ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் கருங்கல்லால் கட்டப்பட உள்ளது. மூலவர் விமானம் தங்கத்தால் அமைக்கப்பட உள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.பாலசுப்பிரமணி, அறங்காவலர்கள் ஜி. ஆர். பாலசுப்பிரமணி, அன்னபூரணி, பாலசுப்பிரமணி ஆகியோர் கோயில் ஸ்தபதியிடம் முன்தொகை வழங்கி திருப்பணியை தொடங்கி வைத்தனர். நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், பொன்ராஜ் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் தங்கம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி