உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

நத்தம், : நத்தம் அருகே அய்யாபட்டி துாண்டிக்கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ் விழாவையொட்டி நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு நடந்தது. தொடர்ந்து இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தொழிலதிபர் அமர்நாத் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை