உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுவாமி உருவங்களுடன் வந்த கேரள பக்தர்கள்

சுவாமி உருவங்களுடன் வந்த கேரள பக்தர்கள்

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி உருவங்களுடன் கோபுர காவடிகளை கேரள பக்தர்கள் எடுத்து வந்தனர்.பழநி முருகன் கோயிலுக்கு பிற மாநில ,மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வருகின்றனர். நேற்று கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பக்தர்கள் விநாயகர், ஆஞ்சநேயர், சிவன், காளி ,நரசிம்மர் சுவாமி உருவங்கள் உடைய அலங்காரங்களுடன் கிரிவீதியில் வலம் வந்தனர். அவர்களுடன் மூன்று கோபுர காவடிகளும் எடுத்து வரப்பட்டன. கிரிவீதியில் வலம் வந்தபின் படிப்பாதை மூலம் முருகன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின் சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை