உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ துவக்கம்

திண்டுக்கல்லில் கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ துவக்கம்

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் கேரளா பர்னிச்சர் எக்ஸ்போவை மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவக்கி வைத்தார். திண்டுக்கல்லில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2ம் முறையாக கேரளா பர்னிச்சர் விற்பனை கண்காட்சி தாடிக்கொம்பு ரோட்டில் பி.வி.கே. மகாலில் நடைபெற்று வருகிறது. கண்காட்சியை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியில் ஏராளமான பர்னிச்சர்கள் உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. புகழ்பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட்மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களும், டெல்லி ஆன்டிக்டிசைனர் சோபாக்கள், நீலாம்பூர் டீக்வுட் பர்னிச்சர்கள் அனைத்தும் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தேக்கு மர சோபா, கட்டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா மெத்தை உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் கிடைக்கும். கண்காட்சி அக்.,1 முதல் 6 வரை கண்காட்சி நடக்கிறது. தொடர்புக்கு 97447 37344 என்ற எண்ணில் அழைக்கலாம் என நிறுவனர் நவ்ஷாத் தெரிவித்தார். ஏற்பாடுகளை மேலாளர் பினிஷ் மேத்யூ செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி