மேலும் செய்திகள்
பகவதி அம்மன் கோயிலில் துர்காஷ்டமி
01-Oct-2025
மண்டலாபிஷேக விழா
24-Oct-2025
நத்தம்: -சாணார்பட்டி அருகே சிலுவத்துார் பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவையொட்டி தீர்த்தக் குடங்கள் அழைத்தல், கோபூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால யாக பூஜை நடந்தது. இதோடு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை ஹோமம் நடைபெற்றன.யாக பூஜையை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழக்க ஊர்வலமாக எடுத்து வர விமானத்தை அடைந்தன. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்திற்கு ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
01-Oct-2025
24-Oct-2025