மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
09-Aug-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பொருளூர் மகாகணபதி, மகாகாளியம்மன், மகாமாரியம்மன், மகாதுர்க்கை அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு மங்கல இசையுடன் விழா துவங்கியது. பூர்வாங்க பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்வியம், கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தது. அன்று இரவு பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கலசங்களில் கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் மேள தாளத்துடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து முதற்கால பூஜை தொடங்கியது. நேற்று முன் தினம் காலை இரண்டாம் கால யாக பூஜை , விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, கோபுர கலச ஸ்தாபிதம் நடந்தது. இரவு மூன்றாம் கால யாக பூஜையும், நேற்று காலை நான்காம் கால யாக, சூரிய பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து மகாகணபதி, மகா மாரியம்மன், மகா காளியம்மன், துர்க்கை அம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தச தரிசனம், மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம் பூஜை, மகா தீபாராதனை, முலைப்பாளிகை நதியில் சேர்த்தல், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது. விழாவில் ஆசிரியர் கே. கருப்புசாமி, ஆசிரியை பி. மயிலாத்தாள், எஸ்.கே மாட்டுத்தீவனம், எஸ்.கே மாவு மில் எஸ்.கே. சக்திவேல், இந்தியன் பேக்கரி கே.பன்னீர்செல்வன், ஆதர்ஷ் செல்வா, அபிநவ் செல்வா, முன்னாள் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அங்கமுத்து, தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி, டாக்டர்கள் தீபக் ,நிவாஷினி, ஆர்க்கிடெக்சர் ராம்குமார், செல்வரஞ்சனி,ஆர்.ஜே. சேகர் இண்டஸ்ட்ரீஸ் துரை லேத், பால் கொள்முதல் பி.மகேஷ் சண்முகம், முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பண்ணாடி அங்கமுத்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொருளூர், ஆலமரத்துப்பட்டி, வெருவாடி நாயக்கன்வலசு காணியாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
09-Aug-2025