உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை

கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கூலித்தொழிலாளி லட்சுமணன் 55, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொடைரோடு நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணன், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அஜித் 27, இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்தது. இன்று (நவ.,4) மதியம் 3:00 மணிக்கு லட்சுமணன் மகன் உதயக்குமார் திண்டுக்கல்–மதுரை நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே இருந்தபோது அஜித், அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கினர். இதுகுறித்து அம்மையநாயக்கனுார் போலீசில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து லட்சுமணன் டூவீலரில் நாகையகவுண்டன்பட்டிக்கு வந்தபோது அஜித் தரப்பைச் சேர்ந்த நால்வர் வழிமறித்து அவரை வெட்டிக் கொலை செய்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ