உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் கோயிலில் விளக்கு பூஜை

நத்தம் கோயிலில் விளக்கு பூஜை

நத்தம்: -நத்தம் அருகே குட்டூரில் உள்ள உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பெளர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்குக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து கோயில் வளாகத்தில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கபட்டது.இதேபோல் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள வாராஹி அம்மன் கோயிலிலும் பெளர்ணமி பூஜை நடந்தது. யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !