உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

ஒட்டன்சத்திரம்: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது . ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில் , பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயில், விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மன் கோயில், எஸ். அத்திக்கோம்பை எட்டுக்கை உச்சிமாகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொத்தையம் சக்தி விநாயகர் கோயிலில் அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. நத்தம் :- மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அன்னக்கூழ் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில், குட்டூர் உண்ணாமலை அம்மன் அசோக்நகர்பகவதி அம்மன், மீனாட்சிபுரம் காளியம்மன், ராக்காயி அம்மன்,தில்லை காளியம்மன்,வாராகி அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ