மேலும் செய்திகள்
ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் பரவும் தொற்று...
25-Nov-2024
யானை பற்களை விற்க முயன்ற மூவர் கைது
01-Dec-2024
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும்.--நவீன், திண்டுக்கல்...... நடவடிக்கை எடுக்கப்படும்
திண்டுக்கல் நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.-ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்.......... பள்ளங்களால் தவிப்பு
வத்தலக்குண்டு அனைத்து வார்டுகளிலும் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை.-சிவா,வத்தலக்குண்டு. தீர்வு காணப்படும்
வத்தலக்குண்டு அனைத்து வார்டுகளிலும் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் விரைவில் சரி செய்யப்படும்.-சிதம்பரம்,பேரூராட்சி தலைவர்,வத்தலக்குண்டு. கழிவுநீரால் அவதி
கம்பிளியம்பட்டியில் ரோட்டோரம் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் பாய்வதால் பாதசாரிகள் அவதியுறுகின்றனர்.-ராஜரத்தினம், கொம்பேறிபட்டி. தடுக்கப்படும்
அப்பகுதியில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.-கதிரேசன், ஊராட்சி செயலாளர், பிலாத்து. தெருநாய்களால் அச்சம்
கொடைக்கானல் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் மக்கள் ரோட்டில் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். கட்டுப்படுத்தப்படும்
கொடைக்கானல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.செல்லத்துரை,நகராட்சி தலைவர்,கொடைக்கானல். கருவேல மரங்கள்
வேடசந்துார் குடகனாற்றில் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.-ராமசாமி,வேடசந்துார். சுத்தப்படுத்தப்படும்
குடகனாற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.-மேகலா,பேரூராட்சி தலைவர்,வேடசந்துார். சேதமான ரோடு
பழநி பழைய தாராபுரம் ரோட்டில் சுகாதார வளாகம் அருகே ரோடு சேதமாகியுள்ளது. இதனால் பொது மக்கள் விபத்தில் சிக்குகின்றனர். தீர்வு காணப்படும்
சேதமான ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.-முருகேசன், கவுன்சிலர், பழநி.
25-Nov-2024
01-Dec-2024