தொழில் முனைவோருக்கு கடனுதவி
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில், நடந்த தொழில்முனைவோர் கடனுதவி வழங்கும் முகாமில் 20 தொழில் முனைவோர்களுக்கு ரூ.18.06 கோடி மதிப்பில் கடனுதவிகளை கலெக்டர் துர்கா வழங்கினார். நிகழ்வில் தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், கனரா வங்கி உதவி பொது மேலாளர் ராகுல்வின்ஞாமுரி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஹரிஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தங்கத்துரை பாண்டியன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.