உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை இ-பாஸ் நடைமுறையில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு

கொடை இ-பாஸ் நடைமுறையில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு

திண்டுக்கல் : ''அனுமதி பெறாத உள்ளுர் வாகனங்கள் புதியதாக உள்ளுர் இபாஸ் பெற கொடைக்கானல் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டுமென '''கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.கலெக்டர் கூறியதாவது: உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை தற்போது வரை நடைமுறையில் உள்ளது. கோடைக்காலம் துவங்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு நேற்று முதல் ஜூன் வரை வாரநாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கும் அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள epass.tnega.org என்ற இணையதளத்தில் இ பாஸ் பெறலாம். அரசு பஸ்கள், உள்ளூர் வாகனங்கள், விவசாயப் பொருட்கள்,சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற விலக்களிக்கப்படுகிறது. ஏற்கனவே அனுமதி பெறாத உள்ளுர் வாகனங்கள் புதியதாக உள்ளுர் இபாஸ் பெற கொடைக்கானல் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் அருகில் ,ரோஸ் கார்டன் அருகிலும் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் விண்ணப்பம் முழுவதும் வழங்கப்பட்டு தங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்படுமேயானால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு அதே தேதியில் ஏதேனும் இடங்கள் காலியானால் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்றார்.பழநி : பழநி வழியே கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டதை முன்னிட்டு செக் போஸ்டில் சோதனை நடைபெற்றது.கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் முறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. வெளி மாநில,மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாகனங்கள் மூலம் பழநி வழியாக கொடைக்கானல் செல்கின்றனர். பழநி வழியே கொடைக்கானல் செல்லும் சாலையில் தேக்கம் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள போலீஸ் செக் போஸ்ட்டில் இ-பாஸ் சோதனை நடைபெற்றது. இந்த வழியே வரும் சுற்றுலா பயணிகள் செல்லும் கார் , நான்கு சக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்ட பின் அனுமதிக்கப்பட்டது. இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு பாலசமுத்திரம் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகம் , போலீசார் செய்துள்ளனர். இரவு, பகல் நேரங்களில் போலீசார் , பேரூராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை