உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேச்சு

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பேச்சு

பழநி : ''மாணவர்களிடையே ஊழல் ஒழிப்பு நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்'' என லோக் ஆயுக்தா உறுப்பினரான நீதிபதி ராம்ராஜ் பேசினார். பழநி ஐ.டி.ஓ., மேல் நிலைப்பள்ளியில் நடந்த 1982--83 ல் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பணம் சொத்துக்கள் முக்கியமானதை விட நட்பு வட்டாரம் மிகவும் முக்கியமானது. ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு, அரசியல், விஞ்ஞானம், சமூக விழிப்புணர்வு கருத்துக்களை வளர்க்க ஆண்டுதோறும் சொற்பொழிவுகளை நடத்த வேண்டும்.பள்ளி மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க, பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்க கண்காணிப்பு குழுக்களை பள்ளிகளில் அமைக்க வேண்டும். இதனை முன்னாள் மாணவர்கள் கடமையாக செயலாற்ற வேண்டும் என்றார். கந்தவிலாஸ் பாஸ்கரன், டாக்டர் உதயகுமார், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், எல்.ஐ.சி., முகவர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், தொழிலதிபர் ஜாபர்அலி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ