உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்திர கிரகண கல்வெட்டு பழனியில் கண்டெடுப்பு

சந்திர கிரகண கல்வெட்டு பழனியில் கண்டெடுப்பு

பொள்ளாச்சி: திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் நடத்திய ஆய்வில், சந்திர கிரகணத்தை குறிக்கும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவன இயக்குநர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழனி பெரியநாயகி அம்மன் கோவிலின் திருச்சுற்றாலை ஈசான மூலையில், யாகசாலை கட்டடத்தின் சுவரில் கல்வெட்டு பொதிந்திருப்பது கண்டறியப்பட்டது. கல்வெட்டின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்திருந்தன. அதில், நான்கு வரிகள், பார்வைக்கு தெரிகிறது. சந்திர கிரகணத்தன்று கோவிலுக்கு ஒருவர் கொடை அளிக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. மேலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலத்திலும் கிரகணங்களை முன்கூட்டியே கணிக்கும், வானியல் அறிவு பெற்ற தமிழ் அறிஞர்கள் வாழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. கல்வெட்டின் எழுத்தமைப்பு, கி.பி., 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருப்பதால், திருமலை நாயக்கரின் ஆட்சியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ