மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல் :15 பேர் மீது வழக்கு
11-Nov-2026
வடமதுரை: கம்பிளியம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே இருக்கும் இடம் தொடர்பான பிரச்னையில் எஸ்.குரும்பபட்டி பாண்டீஸ்வரி 49, அதே பகுதி பெருமாள் 60, தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்களை அகற்றி இடத்தை சமன் செய்யும் பணி நடந்தபோது, தகராறு முற்றியதில் இருதரப்பாக தாக்கிக் கொண்டனர். பாண்டீஸ்வரி, பெருமாள் காயமடைந்தனர். மண் அள்ளும் இயந்திரத்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. ஒரு தரப்பில் பெருமாள், அவரது மகன் சதீஸ்குமார் 35 மீதும், மற்றொரு தரப்பில் பாண்டீஸ்வரி, அவரது மகன் முருகன் உள்ளிட்ட மூவர் மீதும் வழக்குப் பதிந்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Nov-2026