காட்டேஜ் உரிமையாளர் கொலையில் நீதிமன்றத்தில் மதுரை வாலிபர் சரண்
கொடைக்கானல்:திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானலில் காட்டேஜ் உரிமையாளர் எரித்துக்கொலை செய்யப்பட்டதில் மதுரையை சேர்ந்த மேலும் ஒருவர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.கொடைக்கானல் குருசரடி மெத்து பெரும்பள்ளத்தை சேர்ந்தவர் சிவராஜன் 58.பெரும்பள்ளம் பகுதியில் காட்டேஜ் நடத்தினார். போதைக்கு அடிமையான இவர் மதுரை அழகர் கோயில் அருகே போதை மீட்பு மையத்தில் சிகிச்சையில் இருந்த போது அங்கிருந்தவர்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். அதன்படி மணிகண்டன் 28, உட்பட சிலர் கொடைக்கானல் சிவராஜன் காட்டேஜில் தங்கி சமையல் வேலை செய்துள்ளனர். சம்பளம் சம்பந்தமாக தகராறு ஏற்பட சிவராஜனை கொலை செய்து உடலை காட்டேஜ் அருகே எரித்தனர். போலீசார் மதுரை தத்தனேரி மணிகண்டனை கைது செய்த நிலையில், மதுரை செக்கானுாரணியை சேரந்த அருண் 28, கொடைக்கானல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்ததார். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.