மேலும் செய்திகள்
மேக மூட்டத்துடன் போக்கு காட்டும் மழை
11-Sep-2026
ஒட்டன்சத்திரம்: பெரியகோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கோடை மழையால் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் நடவு பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சில மாதங்களாகவே மழையின்றி வெயில் சுட்டெரித்து வந்தது. சமீபத்தில் பெரியகோட்டை பகுதியில் மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் உழவு செய்து விதைப்பதற்கு போதுமான அளவிற்கு ஈரப்பதம் காணப்பட்டது. இதனை பயன்படுத்தி முதற்கட்ட வேளாண் பணிகளை இப்பகுதி விவசாயிகள் துவங்கி உள்ளனர். டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்து மானாவாரியாக மக்காச்சோளத்தை அதிகளவில் நடவு செய்து வருகின்றனர். விவசாயி கூறுகையில், 'மக்காச்சோளம் விதைப்பு பணி துவங்கி உள்ள நிலையில் உரங்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
11-Sep-2026