உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

 பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

நத்தம்: -நத்தம் அருகே தனியார் மில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார். முளையூர்-ராவுத்தம்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம் 53. தனியார் மில்லில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கோமனாம்பட்டி பகுதியில் மில் வேலைக்கு செல்லும் ஆட்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அய்யனார் 23, என்பவர் பஸ்சை வழிமறித்து டிரைவருடனும், பஸ்சில் சென்றவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை தர்மலிங்கம் கேட்க அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கையால் உடைத்து சேதப்படுத்தினார். நத்தம் போலீசார் அய்யனாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ